செப்.12.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். ஆய்வுப் பயணத்தின் கீழ் 185வது சட்டமன்ற தொகுதியாக அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர் இளங்கோவுடன் சென்று அரவக்குறிச்சியில் ஆய்வு மேற்கொண்டார்.
வேலம்பாடி ஊராட்சி, சௌந்தராபுரம் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் விரிவான ஆய்வு மேற்கொண்டு, ஆசிரியர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். மேலும் மாணவர்களின் கற்றல் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் குறித்து ஆய்வு மேற்கொண்டு, தொடு திரையின் வாயிலாக மாணவர்களுக்கு உயிரினங்களின் பெயர்களை சொல்லிக் கொடுத்தார்.