நவ.30.
கரூர் மாநகராட்சியில் வார்டுகள் தோறும் டிசம்பர் 1 ம் தேதி நடைபெறும் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறுமாறு மின்சார துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விடுத்துள்ள அறிக்கை-
தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க ஸ்டாலின் அவர்கள், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, வருகின்ற டிசம்பர் 1, ஞாயிறு அன்று கரூர் சட்டமன்ற தொகுதி மற்றும் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் கீழ்கண்ட விபரப்படி வார்டு வாரியாக பொது மக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களைப்பெறும் நிகழ்வு நடைபெற உள்ளது. அந்தந்த பகுதி மக்கள் அனைவரும் இதில் கலந்துகொண்டு, கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
டிசம்பர் 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி 47வது வார்டு பட்டாளம்மன் திருக்கோவில் கோடங்கிபட்டி, காலை 7:45 மணி 46வது வார்டு பகவதி அம்மன் திருக்கோயில், செல்லாண்டிபாளையம், காலை 8:30 மணி 45, 46வது வார்டு பகவதி அம்மன் திருக்கோவில் ராயனூர். காலை 9:15 மணி 44 வது வார்டு பாரதிதாசன் நகர் (சுரேந்தர் ஹோட்டல் எதிரில்). காலை 10:30 மணி 48 வது வார்டு காளியப்பனூர் மெயின் ரோடு. காலை 11:15 மணி 42 வது வார்டு கணபதிபாளையம் கோவில் அருகில் நண்பகல் 12 மணி 43 வது வார்டு மாரியம்மன் கோவில் (மண்டலம் 4 அலுவலகம் அருகில்), பகல் 12.45 மணி 37 வது வார்டு வ.உ.சி. தெரு (வாங்கலம்மன் ஸ்டோர்ஸ் எதிரில்), மதியம் 1.30 மணி 36வது வார்டு திருமாநிலையூர் பழைய பாலம். மதியம் 3 மணி 41வது வார்டு அசோக் நகர், மதியம் 3.45 மணி 40 வது வார்டு சக்தி நகர் விளையாட்டு மைதானம். மாலை 4.30 மணி 39வது வார்டு டிஎன்ஹச்பி. காலனி ரேஷன் கடை அருகில்.
மாலை 5.15 மணி 15 வது வார்டு நரிக்கட்டியூர் கோவில் அருகில். மாலை 6 மணி 14வது வார்டு வெள்ளாளப்பட்டி கோவில் அருகில். மாலை 6:45 மணி. 13 வது வார்டு சணப்பிரட்டி. இரவு 7:30 மணி 16வது வார்டு இபி.காலனி விளையாட்டு மைதானம். மேற்கண்ட பகுதியில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் சார்பில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு
டிச.7. இளம் தலைவர் நாளைய பிரதமர் - பாராளுமன்றம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்...