அக்.1.
கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்கம். பபாசியுடன் இணைந்து மூன்றாம் ஆண்டு புத்தகத் திருவிழாவை கரூர் பிரேம் மகாலில் நடத்துகிறது. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் V செந்தில் பாலாஜி (03.10.2024) அன்று தொடங்கி வைக்கிறார். புத்தகத் திருவிழா முன்னேற்பாட்டு பணிகளை கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கரூர் மாவட்ட எஸ்.பி. ஃபெரோஸ் கான் அப்துல்லா, டி ஆர்ஓ. கண்ணன், மாநகராட்சி ஆணையர் சுதா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுஜாதா, மாவட்ட வழங்கல்அலுவலர் சுரேஷ், கரூர் ஆர்டிஓ முகமது பைசல், மாவட்ட நூலக அலுவலர் சிவகுமார் உடன் இருந்தனர்.
பின்னர் கலெக்டர் கூறியது-
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி, பள்ளி, கல்லூரி மாணவிகள், இளைஞர்கள் அனைத்துத் தரப்பினரிடமும் வாசிப்புப் பழக்கத்தை அதிகரித்து அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்கும் வகையில், புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்லும் நோக்கத்தோடும் மாவட்டங்களில் புதிய நூலகங்கள் அமைத்தல், அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த ஆண்டு கரூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட புத்தகத் திருவிழா பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், புத்தக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடையே மிகுந்த வரவேற்பையும். பாராட்டையும் பெற்றது. அதேபோன்றும் இந்த ஆண்டும் கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கரூர் புத்தகத் திருவிழா-2024 வருகின்ற 03.10.2024 வியாழக்கிழமை அன்று தொடங்கி 13.10.2024 ஞாயிற்றுக்கிழமை வரை 11 நாட்கள் கரூர், பிரேம் மஹாலில் நடைபெறவுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பயன்பெறவும். கலை மற்றும் இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்திடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்புத்தகக் கண்காட்சியில் கரூர் மாவட்ட பண்பாடு, கலாச்சாரம் சார்ந்த கலை நிகழ்ச்சிகள் நடத்திடவும். மாணவர்களுக்கு பயன்படும். மின்நூல் மற்றும் மின்பொருண்மை பதிப்பாளர்களின் படைப்புகளைக் கொண்ட விற்பனையகங்கள் அமைத்திடவும். அரிய வகை புத்தகங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. மேலும், அரசுத் துறைகளின் திட்டங்கள். குறித்த அரங்கங்கள். வாசிப்பு அரங்கங்கள் மற்றும் பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி வாசிப்பு அரங்கம். ஒளி ஒலிஅமைப்புடன் கூடிய அரங்கங்கள் இடம்பெறவுள்ளன. நிகழ்ச்சி நடைபெறும் அனைத்து நாட்களிலும் தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களின் கருத்தரங்கம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும். நூல் விற்பனையகங்கள் அனைத்தும் புத்தகக் கண்காட்சிக்கு வருபவர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் அதன் கருப்பொருள் அடிப்படையில் வரிசைப்படுத்தி அமையும் வகையில் அரங்குகள் அமைத்திடவும், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இப்புத்தகக் கண்காட்சியில் பங்கேற்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் இலக்கியம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் அரங்குகளில் கரூர் மாவட்ட எழுத்தாளர்களின் படைப்புகளை காட்சிப்படுத்தி அப்படைப்புகள் சார்ந்த உரையாடல் நடைபெறும்.
கரூரில் நடைபெறவுள்ள இப்புத்தகக் கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு புத்தக ஆர்வலர்கள். பள்ளி. கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பயன்பெறும் வகையிலான புத்தகங்கள் இடம்பெற உள்ளன என்றார்.