ஜூலை.16.
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் வெள்ளப்பெருக்கை, தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ் ராமச்சந்திரன், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தனர். கோத்தகிரி – ஊட்டி செல்லும் வழியில், புதுதோட்டம் பகுதியில், போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் விழுந்திருந்த மரங்களை அகற்றும் பணிகளை விரைவுப் படுத்தினர். ஊட்டி தலைகுந்தா பகுதியில், மழையின் காரணமாக, அறுந்து விழுந்த HT மின் கம்பிகளை விரைந்து சீரமைக்கும் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார்.அமைச்சர்கள் கேகேஎஸ்.ராமச்சந்திரன், வனத்துறை ராமச்சந்திரன் உடனிருந்தனர்.
கடும் மழையிலும் உழைக்கும் நீலகிரி மின் பகிர்மான வட்ட, மின்வாரிய அதிகாரிகள் & ஊழியர்களை சந்தித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பாராட்டினார். கூடலூர் தொரப்பள்ளியில் உள்ள பள்ளியில தங்க வைக்கப்பட்டுள்ள மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அமைச்சர்கள் நிவாரண உதவிகளை வழங்கினர்.