டிச.15.
மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் Vசெந்தில்பாலாஜி கரூர், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 2-ம் கட்டமாக பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் அனைத்து மனுக்கள் மீது உடனடியாக பரிசீலனை செய்து தகுதியுடைய அனைவருக்கும் தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகளை விரைவாக வழங்குமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய வேலை ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் ரூ.28.01 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மின்னாம்பள்ளி, பஞ்சமாதேவி ஊராட்சி மன்ற கட்டடம்0ரூ.19.38 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சி கருங்கல் காலனியில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி என மொத்தம் ரூ.47.39 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் மூலம் கொளந்தாகவுண்டனூரில் ரூ.17.43 கோடி மதிப்பீட்டில் தரை மற்றும் ஐந்து தளங்களுடன் 125 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கரூர் மண்டலம் சார்பாக கரூர்-விழுப்புரம். கரூர் -கோயமுத்தூர். பள்ளப்பட்டி -விழுப்புரம் ஆகிய தடங்களுக்கு புதிய பேருந்துகளை கரூர் பேருந்து நிலையத்திலிருந்து கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். மாவட்ட எஸ்.பி, பெரோஸ்கான் அப்துல்லா. மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீலேகாதமிழ்ச்செல்வன். சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் (குளித்தலை), இளங்கோ(அரவக்குறிச்சி) சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), மாநகராட்சி மேயர் வெ.கவிதா கணேசன், துணை மேயர் ப.சரவணன், மண்டல குழு தலைவர்கள் கனகராஜ், ராஜா, அன்பரசு, சக்திவேல் மாநகராட்சி ஆணையர் சுதா. பொது மேலாளர் சிவசங்கரன், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உதவி நிர்வாக பொறியாளர் தமிழரசு, மாமன்ற உறுப்பினர்கள். கலந்து கொண்டனர்.