பிப்.28.
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நாளை நடைபெறுகிறது. கரூர் மாவட்டத்தில் 344 இடங்களில் முதலமைச்சர் பிறந்தநாள் விழா நடைபெறுகிறது. கரூர் மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான வி.செந்தில் பாலாஜி இதனை தெரிவித்துள்ளார். நாளை காலை 8 மணிக்கு கரூர் மாவட்ட திமுக சார்பில் வெண்ணமலை அன்பு கரங்கள் இல்லத்தில் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்டம் முழுவதும் உணவு வழங்குதல், கட்சி கொடியேற்றுதல், இனிப்பு வழங்குதல், அன்னதானம், பொங்கல் வழங்குதல், குழந்தைகளுக்கு பேனா பென்சில், கல்வி உபகரணங்கள் வழங்குதல், நோட்டுப் புத்தகம் வழங்கல், மரக்கன்று வழங்குதல், துப்புரவு பணியாளர்களுக்கு புத்தாடை சீருடை நலத்திட்ட உதவிகள் வழங்குதல், வேட்டி சேலை வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுதல், முதியோருக்கு உதவி வழங்குதல், முதியோர் இல்லங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், ரத்ததான முகாம், கிரிக்கெட் போட்டி, கபடி போட்டி, கையுந்து பந்து, சைக்கிள் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சிகள் கரூர் மாவட்டத்தில் திமுக சார்பில் 344 இடங்களில் நடைபெறுகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.