அக்..12.
ஒரு நாளைக்கு ஒரு வார்டு அல்லது ஒரு ஊராட்சி என்கிற முறையில் பொதுமக்களை சந்தித்து குறைகளை தீர்க்கும் திட்டத்தை அமைச்சர்.செந்தில் பாலாஜி துவக்கி கரூர் பசுபதிபாளையம் பகுதியில் இன்று ஆய்வு நடத்தினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது-
இது தவிர கரூர் நகராட்சியில் புதிதாக 2300 தெரு விளக்குகள் அமைக்கப்பட இருக்கின்றன.
தமிழகத்தில் பருவமழை காலத்தை எதிர் கொள்ளும் வகையில் மின்சாரத் துறை சார்பாக ஒரு லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கின்றன. அனல் மின் நிலையங்கள் வாயிலாக 4320 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய திறன் திறன் இருக்கிறது. எனினும் கடந்த ஆட்சியில் வெறும் 1800 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்து இருக்கின்றனர் . இந்த வகையில் தமிழக மின் உற்பத்தியை 3500 மெகாவாட் ஆக உயர்த்த தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்கள். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.