நவ.10.
2021 ஆம் ஆண்டு அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு இணையதள வழியில் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. இதில் சிறப்பாக செயல்பட்ட மாணவ மாணவிகளை மாநில அளவில் தேர்வு செய்து 68 பேர் தேர்வு செய்யப்பட்டு பன்னாட்டு புத்தகத் திருவிழாவிலும் பங்கேற்க உள்ளனர். மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவிகள் இன்று வெளிநாட்டு கல்வி சுற்றுலா புறப்பட்டனர். 68 மாணவ மாணவிகளுடன் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று துபாய் சென்றார். சார்ஜாவில் நடைபெறும் பன்னாட்டு புத்தக திருவிழாவிலும் இவர்கள் பங்கேற்க உள்ளனர் . மாணவர் மாணவிகளுடன் ஐந்து ஆசிரியர்கள் பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் அமுதவல்லி உள்ளிட்ட அதிகாரிகளும் துபாய் சென்றுள்ளனர்.