ஏப்.30.
தமிழ்நாட்டில் கூடுதலாக மின் தேவை ஏற்பட்டாலும் சமாளிக்க தயார் நிலையில் மின்வாரியம் உள்ளது. வரலாறு காணாத அளவிற்கு மின் தேவை அதிகரித்துள்ளது. எனினும் மின் பயன்பாட்டில் இன்னும் கூடுதலாக உச்சபட்ச தேவை இருந்தாலும் மின்வாரியம் சமாளிக்கும். கோவையில் இருந்து மின்சாரம் தொடர்பான பதிவு வந்தது. அதை பார்த்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபரிடம் எந்த பகுதி என கூறுங்கள் சரி செய்கிறோம்கேட்டபோது நான் பொதுவாக பதிவிட்டேன் என்று கூறிவிட்டார். பொதுமக்களுக்காக உருவாக்கப்பட்ட குறைதீர்க்கும் மையத்தின் தளத்தில் வந்து பலர் அவதூறு செய்திகளை பரப்புகிறார்கள். அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
எனவே மின்விநியோகத்தில் பாதிப்பு- குறை இருந்தால் மின் இணைப்பு எண் சேர்த்து பதிவிட வேண்டும். அவ்வாறு பதிவிட்டால் உடனடி நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும். 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொண்டு 24 மணி நேரமும் செயல்படும் மின்னகம் சேவை மையத்தில் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் ஒருவர் தனது இல்லத்தில் மின்னழுத்த குறைபாடு குறித்து புகார் செய்திருந்தார். எனினும் அதில் மின் இணைப்பு எண் குறிப்பிடப்படவில்லை. அவர் செல்போன் நம்பர் மட்டும் குறிப்பிட்டு இருந்ததை வைத்து, மின்வாரியத்தினர் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்து சரி செய்தனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட மின் நுகர்வோருக்கு, உங்கள் புகார் சரி செய்யப்பட்டுள்ளது என அமைச்சரே பதில் அளித்து உள்ளார். இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட பதிவு:
அன்புச் சகோதரரே, உங்கள் இல்லத்தில் இருந்த மின்னழுத்த குறைபாடு சீர் செய்யப்பட்டது..
அலைபேசி எண்களுக்கு மாற்றாக,
நண்பர்கள் மின் இணைப்பு எண்ணை வழங்கினால், விரைந்து குறைபாடுகளை களைய ஏதுவாக இருக்கும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.