ஜூன்.9.
கரூர் மாவட்டத்தில் குவாரி மற்றும் கனிமக் குத்தகை உரிமங்கள் வழங்கப்பட்டு குவாரிப்பணிகள் நடைபெற்றுவருகிறது. குவாரிகளிலிருந்து வெட்டியெடுக்கப்படும் கனிமங்களை வெளியே எடுத்து செல்ல ஏதுவாக குத்தகைதாரர்களுக்கு வழங்கப்படும் இசைவாணைச்சீட்டு (E-Permit) வழங்குவது 25.02.2025 முதல் நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மூலம் அனுமதி பெற்றுள்ள கனிம இருப்பு கிடங்கில் இருந்து இருப்பு வைத்துள்ள கனிமங்களான எம்-சாண்ட் ஜல்லி, டஸ்ட் பி.சாண்ட் மற்றும் இதர கனிமங்களை வெளியே எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு வழங்கப்படும் நடைச்சீட்டினை (Transport Permit / Transit Pass) இணையதள வாயிலாக வழங்குவதற்கு அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் பதிவு செய்த கனிம இருப்பு கிடங்கு உரிமையாளர்கள் mimas.tn.gov.in இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பித்து எதிர்வரும் 09.06.2025 தேதி முதல் இணையதளம் வாயிலாகவே நடைச்சீட்டு (Bulk Transport Permit, Transit Pass) பெற்றுக்கொள்ள இயலும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கனிம இருப்பு கிடங்கிலிருந்து வெளியே எடுத்துச்செல்லும் எம்-சாண்ட் ஐல்லி, டஸ்ட், பி.சாண்ட் மற்றும் இதர கனிமங்களுக்கான இணையதள அனுமதிச் சீட்டினை வாகன ஓட்டுநர்கள் கட்டாயம் வாகன தணிக்கையின் போது வைத்திருக்க வேண்டும். உரிய அனுமதியில்லாமல் எம்-சாண்ட் ஜல்லி, டஸ்ட் பி.சாண்ட் மற்றும் இதர கனிமங்கள் எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டால் அரசு விதிகளின்படி உரிய கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கலெக்டர் தங்கவேல் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.