ஜன.17
எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி கரூர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட அவைத்தலைவர் திருவிக தலைமையில் கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கரூர் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் படத்திற்கும், அதிமுக கட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கும், படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் எம்.ஜி.ஆர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.