ஜன.16.
கரூர் மாநகரில் குற்றங்கள் நடைபெறுவதை தடுக்கவும் நடைபெற்ற குற்றங்களை கண்டுபிடிக்கவும் குற்றங்கள் நடைபெறாமல் இருக்கவும். மூன்றாம் கண் என அழைக்கப்படும் CCTVகேமராக்கள் கரூர் மாவட்ட வணிகர் சங்கம் சார்பில் சுமார் ரூ.25 லட்சம் செலவில் பொருத்தப்பட்டது.
கடந்த 4.12.2022 அன்று அமைச்சர் செந்தில் பாலாஜி இதனை துவக்கி வைத்தார் ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் பராமரிப்பு செய்ய வேண்டும் என காவல்துறை சார்பில் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கரூர் மாவட்ட வர்த்தக சங்கம் பராமரிப்பு (AMC) செலவை ஏற்றுக்கொள்வது என முடிவு செய்து, அதற்கான தொகை ரூ.1 லட்சம் இதற்கான காசோலையை. கரூர் காவல் நிலையத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் வழங்கினர். மாவட்ட எஸ்பி. சுந்தரவதனம் முன்னிலையில் வழங்கப்பட்டது. ஏ.டி.எஸ்.பி. கண்ணன், கரூர் உட்கோட்ட டி.எஸ்.பி. தேவராஜ், கரூர் ஆய்வாளர் மிதுன் பங்கேற்றனர்.
கரூர் மாவட்ட தலைவர் k.ராஜூ. சிசிடிவி ஏகாம்பரத்திடம் வழங்கினார். செயலாளர் வெங்கட்ராமன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி , மாநிலத் துணைத் தலைவர் கந்தசாமி கலந்து கொண்டனர்.