பிப்.22.
கரூர் மாவட்ட ஆயுதப்படையில் எஸ்.பி.பெரோஸ்கான்அப்துல்லா இன்று கவாத்து நிகழ்ச்சியை நேரில் பார்வையிட்டார். அப்போது காவலர்களின் நிறைகுறைகளை கேட்டறிந்தார்.
மேலும் காவல்துறையில் 25 வருடம் எவ்வித தண்டனையும் இல்லாமல் பணிபுரிந்த 5 காவல் அலுவலர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் அதி உத்கிரிஸ் சேவாக் பதக்கமும் மற்றும் 20 வருடம் எவ்வித தண்டனையும் இல்லாமல் பணிபுரிந்த 4 காவல் அலுவலர்களுக்கு உத்கிரிஸ் சேவாக் பதக்கத்தை கரூர் மாவட்ட எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பதக்கம் பெற்றவர்கள் விவரம்
சகாய ராஜ், உதவி ஆய்வாளர், வேலாயுதம்பாளையம்.
காளிமுத்து, உதவி ஆய்வாளர், மாயனுர்
உதயகுமார், உதவி ஆய்வாளர், DCB
வாசு, சிறப்பு உதவி ஆய்வாளர், தனிப்பிரிவு மாவட்ட காவல் அலுவலகம்.
சக்திவேல், சிறப்பு உதவி ஆய்வாளர், பசுபதிபாளையம் காவல் நிலையம்.
பரிமளம் சிறப்பு உதவி ஆய்வாளர், கரூர் மாவட்ட குற்ற ஆவண காப்பகம்.
குப்புசாமி சிறப்பு உதவி ஆய்வாளர், கரூர் நகர காவல் நிலையம்.
கந்தசாமி, சிறப்பு உதவி ஆய்வாளர், தென்னிலை காவல் நிலையம்
பாபி, சிறப்பு உதவி ஆய்வாளர், காவல் கட்டுபாட்டுஅறை கரூர்.