ஜூலை. 27.
தமிழகத்தில் தாய்மார்களும் பேறு காலத்தில் தாய்சேய் ஒருங்கிணைந்த கண்காணிப்பிற்காகPICMEஇணையதளத்தில் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்தவுடன் அவர்களுக்கு தாய்சேய் நல அடை அட்டை (RCH ID) வழங்கப்படுகிறது. பதிவு செய்யும் முறை அந்த பகுதியில் பணிபுரியும் கிராம நகர சுகாதார செவிலியர் மூலமாக மட்டுமே பதிவு செய்யப்பட்டு வந்தது.
தற்போது புதிய முறையாக டாக்டர் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் மகப்பேறு தாய்மார்கள் சுயமாகவே PICMEஇணையதனத்தில் சென்று தங்களது கர்ப்பத்தினை பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சுயமாக பதிவு செய்யும் முறையினை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கணினி மூலம் இணையதளத்தில் பதிவு செய்வதற்கும் அதிலுள்ள வலிமையான வழிமுறைகளை கற்றுக்கொடுத்து பதிவு செய்வதற்கு பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத்துறை ஏற்பாடு செய்துள்ளது. ஆரம்பசுகாதார நிலையங்களில் தினமும் காலை 9.00மணி முதல் மாை 5.00 மணி வரை சென்று பதிவு செய்து கொள்ள முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தாய்மார்கள் தங்கள் கைப்பேசி அல்லது கணினி மூலம் http:// picme.tn.gov.in./picme) என்ற இணையத்தில் சென்று சுயபதிவு என்ற கட்டத்தினை அழுத்தி ஆதார் அட்டை கர்ப்பம் உறுதி செய்த ஆவணங்களை பதிவேற்றம் செய்து நிரந்தர தாய்சேய் அடையாள அட்டை (RCH ID) பெறலாம்.
சுய பதிவு மூலம் பெறப்பட்ட 12 இலக்க (RCH ID) நிரந்தரமானது. மீண்டும் கிராம நகர சுகாதார செவிலியரிடம் பெற தேவையில்லை. மகப்பேறு திட்ட அரசு உதவி பெறுவதற்கு 14 ஆவணங்களில் ஒன்றை பதிவு செய்தால் போதும். புதிய திட்டத்தில் கர்ப்ப காலத்தில் முதல் தவணையாக 4வது மாதத்தில் ரூ. 10000/- இரண்டாம் தவணையாக குழந்தை பிறந்த 4வது மாதத்தில் ரூ.6000. மூன்றாவது தவணையாக குழந்தை பிறந்த 9வது மாதத்தின் முடிவில் ரூ.2000. இரண்டு ஊட்டசத்து பெட்டகங்கள் என ரூ4 ஆயிரம் மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் வழங்கப்படும்.
ஒரு தாய்மாருக்கு 2 குழந்தைகளுக்கு மட்டுமே அரசு உதவி வழங்கப்படும். புதிய திட்டமான பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டத்தில் முதல் குழந்தைக்கு ரூ.5 ஆயிரம் இரண்டு தவணையாகவும். இரண்டாவது பெண் குழந்தைகளுக்கு ரூ.ஆயிரம் ஒரு தவணையாகவும் வழங்கப்பட உள்ளது என கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.