மே.23.
கரூர் மாவட்டம். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ், மாவட்ட அளவிலான மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சி கரூர், மாரியம்மன் திருவிழாவினை முன்னிட்டு கரூர் மாநகராட்சி மாவடியான் துவக்கப்பள்ளியில் 23.05.2025 முதல் 31.05.2025 வரை நடைபெற உள்ளது.
இக்கண்காட்சியில் கைவினைப்பொருட்கள். அழகு சாதனப்பொருட்கள். வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள், மெத்தை. தலையணை, போர்வை ரெடிமேட் ஆடைகள், குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொம்மைகள், மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய உணவு பொருட்கள், சூப் பொடி வகைகள், தொக்கு வகைகள், ஊறுகாய் வகைகள், குளியல் சோப்பு, பெனாயில் மற்றும் சுகாதார பொருட்கள் இதுபோன்ற பல வகையான பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. மேலும் இக்கண்காட்சியில் கரூர் மாவட்டமின்றி பிற மாவட்டங்களிலிருந்தும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பங்கேற்று தங்களது உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சிக்கு வருகை தரும் பொதுமக்கள் அனைவருக்கும் அனுமதி இலவசம். எனவே அனைவரும் தவறாமல் இக்கண்காட்சியினை பார்வையிட்டு மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்கள் வாங்கி பயனடையுமாறு கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.