மார்ச்.6.
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவுப்படியும், திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் அறிவுரைப்படியும், திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் வழிகாட்டுதலின்படியும், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பெரோஸ் கான் அப்துல்லா, தலைமையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான இலவச உதவி மைய எண். 181 மற்றும் காவல் உதவி செயலி மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு சம்மந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் 08.03.2025 ஆம் தேதி காலை 06.00 மணிக்கு 5 கிலோ மீட்டர் மாராத்தான் போட்டி நடைபெறுகிறது.
கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் ஆரம்பித்து ஜவஹர் பஜார், தைலா சில்க்ஸ், பழைய GH ரோடு, திண்ணப்பா தியேட்டர், MG ரோடு, 80அடி சாலை, கோவை ரோடு, பேருந்து நிலைய ரவுண்டானா வழியாக திருவள்ளுவர் மைதானத்தில் நிறைவு பெறுகிறது.
இதன் தொடர்ச்சியாக 3 கிலோ மீட்டர் வாக்கத்தான் போட்டியானது கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் ஆரம்பித்து ஜவஹர் பஜார், தைலா சில்க்ஸ், பழைய GH ரோடு, திண்ணப்பா தியேட்டர், பேருந்து நிலைய ரவுண்டான வழியாக திருவள்ளுவர் மைதானத்தில் நிறைவு பெறுகிறது. இப்போட்டிகளில் பள்ளிகள், கல்லூரிகளின் மாணவியர், பெண் காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் ஆகியோர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இப்போட்டிகளில் முதல் 10 இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு கரூர் மாவட்ட எஸ்.பி.பெரோஸ் கான் அப்துல்லா, பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்குகிறார்.