மார்ச்.8.
கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான இலவச உதவி மைய எண்.181 மற்றும் காவல் உதவி செயலி மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று காலை திருவள்ளுவர் மைதானத்தில் கரூர் மாவட்ட எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா 05 கிலோமீட்டருக்கான மினி மாராத்தான் போட்டி மற்றும் 03 கிலோமீட்டருக்கான வாக்கத்தான் போட்டிகளை துவக்கி வைத்தார். இப்போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவிகள்; பெண் காவலர்கள் மற்றும் பெண் ஊர்காவல் படையினர் உட்பட 500 பெண்கள் கலந்துகொண்டார்கள்.
மேலும் இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள்; பெண் காவலர்கள் மற்றும் பெண் ஊர்காவல் படையினருக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை எஸ்.பி. வழங்கினார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி. டிஎஸ்பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.