ஜூன்.16.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் அமலாக்கத்துறையானது மிகவும் கண்டிப்பானது தவறு செய்யும் யாரையும் விடமாட்டார்கள். அவர்களுக்கு எல்லா அதிகாரமும் உள்ளது. யாரையும் கைது செய்ய முடியும். சொத்துக்களை பறிமுதல் செய்ய முடியும் என ஒரு சாரார் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த கருத்துக்களை தவிடு பொடி ஆக்கும் வகையில் உதாரணத்துடன் சமூக வலைதளங்களில் அமலாக்கத்துறை ஒரு மண்ணாங்கட்டி என்ற தலைப்பில் ஒரு பதிவு வைரலாகி வருகிறது அதன் விபரம் வருமாறு-
அமலாக்கத்துறை வானளாவிய அதிகாரம் படைத்தது அதை அசைக்க முடியாது என அரசியல் ரீதியாக சிலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பண மதிப்பிழப்பு அறிவித்து அந்த நடவடிக்கைகளின் போது, ரூ. 2000ரூபாய் நோட்டுக்கு சாமானியன் நாய் மாதிரி வங்கி வாசலில் வரிசையில் நின்றபோது ஒரு இடத்தில் 24 கோடி ரூபாய்க்கு புதிய 2,000 ரூபாய் நோட்டு குவிந்து கிடந்தன. 147 கோடி ரூபாய்க்கு பழைய 500, 1000 ஓவாய் நோட்டு கட்டுகள் இருந்தன.
E.D, I.T, CBI அதிகாரிகள் எல்லாம் வரிசையாக வந்து பிறகு வழக்கு பதிவு செய்யப்பட்டது. வானளாவிய அதிகாரம் படைத்த- சுயமாக செயல்படக்கூடிய- நேர்மையான- அதிகாரிகள் மட்டுமே இருக்கக்கூடிய இந்த அதிகாரிகள் என்ன செய்தார்கள் தெரியுமா?. குற்றவாளிக்கு எதிரான ஆதாரங்களை நீதிமன்றத்தில் முறையாக தாக்கல் செய்யவில்லை. அதனால வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆகிவிட்டது.
அமலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்கை கை கழுவி ஊத்தி மூடி விட்டனர். இவ்வளவுதான் இவர்களது மண்ணாங்கட்டி அதிகாரம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.