ஜூலை 13.
கரூரில் மலபார் கோல்டு டைமண்ட்ஸ் புதிய ஷோருமை மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் மற்றும் துணை மேயர் தாரணி சரவணன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
உலகின் சில்லறை நகை விற்பனையில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமும் இந்தியாவில் பல்வேறு துறைகளில் கால் பதித்து தனது வர்த்தகத்தை விரிவாக்கி கொண்டுள்ள மலபார் குழுமத்தின் முன்னோடி நிறுவனமான மலபார். கோல்டு டைமண்ட்ஸ் நிறுவனம் தற்போது 13 நாடுகளில் 350க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை கோவை மதுரை நாகர்கோயில் திருநெல்வேலி சேலம் ஈரோடு தஞ்சாவூர் இராமநாதபுரம் தர்மபுரி வேலூர் திருச்சி கும்பகோணம் திருப்பூர் காரைக்குடி மயிலாடுதுறை புதுக்கோட்டை மார்தாண்டம் புதுச்சேரி கரூர் ஆகிய நகரங்களில் 27 கிளைகளை கொண்டுள்ளது.
தற்போது தனது புதிய ஷோருமை கரூரில் திறந்துள்ளது புதிய ஷோரூமை மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் மற்றும் துணை மேயர் தாரணி சரவணன் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த ஷோரூமில் அதிகமான இடவசதி புதிய மாடல்கள் மற்றும் டிசைன்களில் தங்கம் வைரம் மற்றும் வெள்ளி நகைகளின் தொகுப்புகள் அதிகமாக இடம்பெற்றுள்ளன. கலைநயமிக்க அணிகலன்கள் இங்கு கிடைப்பது சிறப்பம்சமாகும் அணிந்தாலே ஜொலிக்கும் வைர நகைகள், வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட எரா விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பாள பிரீசியா நகைகள், கைவினை கலைஞர்களால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான எத்தினிக், பாரம்பரிய இந்திய நகை வடிவமைப்புகளில் உருவான டிவைன், குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ஸ்டார்லெட் ஆகியவை இந்த ஷோரூமில் இடம்பெற்றுள்ளன இந்நிகழ்ச்சியில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு மண்டலத்தலைவர் யாசர், தமிழ்நாடு மண்டல வணிகத்தலைவர் சபிர் அலி, மேற்கு மண்டலத்தலைவர் நெளசாத், கிழக்கு மண்டலந்தலைவர் சுதிர் முகமது கரூர் கிளை நுணைத்தலைவர் முஷபா மற்றும் மேலாண்மை உறுப்பினர்கள் கிளை ஊழியர்கள் உடனிருந்தனர்.