பிப்.22.
கரூர் மாநகராட்சி 48வார்டுகளில் ஒரு வார்டில் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். நாற்பத்தி ஏழு வார்டுகளுக்கு ஓட்டு எண்ணிக்கை கரூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. இதுவரை எண்ணப்பட்ட 9-வார்டு முடிவில் 8ல்திமுக வேட்பாளர்களும், ஒரு வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்டீபன் பாபுவும் வெற்றி பெற்றுள்ளனர்.
நாலாவது வார்டில் கவிதா கணேசன் 1993 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் இரண்டாவது இடத்தை954வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் உஷாபிடித்தார் . அதிமுக ரஞ்சிதம் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டு 174 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார்.
5 வது வார்டில் திமுக வேட்பாளர் பாண்டியன் இரண்டாயிரத்து 966 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் இவருக்கு அடுத்து சுசிலா அதிமுக 383 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார்.
திமுக வேட்பாளர்கள் சரவணன் வடிவேல் அரசு, சக்திவேல், கவிதா கணேசன், பாண்டியன், மாரியம்மாள், பூங்கோதை, ராஜேஸ்வரி, காங்கிரஸ் வேட்பாளர் ஸ்டீபன் பாபு திமுக வேட்பாளர் ரஞ்சித் குமார் ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.