மார்ச்.12.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு ஆய்வு கூட்டம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழு தலைவர் தா.உதயசூரியன் தலைமையில், நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர். எஸ்.பி.சுந்தரவதனம், குழு உறுப்பினர்கள் / சட்டமன்ற உறுப்பினர்கள் அர்ஜூனன் (திண்டிவனம்).சின்னப்பா {அரியலூர்), அம்பேத்குமார் (வந்தவாசி).தேவராஜூ (ஜோலார்பேட்டை.மகாராஜன் (ஆண்டிப்பட்டி), ராமசந்திரன் (அறந்தாங்கி), குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் .மாணிக்கம், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, முன்னிலை வகித்தனர்.
புகழூர் வட்டம், புகழி மலை முருகன் கோவில் குட முழுக்கு ரூ.62,62 இலட்சம் மதிப்பீட்டில் 15 பணிகள் நடைபெற்று வருவதையும், மற்றும் மலை பகுதியில் தொல்லியல் துறை பண்டைய காலத்து சமணர் படுக்கையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
நஞ்சை புகழூர் பகுதியில் பொதுபணித்துறை(நீர்வளம்) சார்பில் ரூ. 106.50 கோடி மதிப்பீட்டில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டும் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது .உதயசூரியன் தலைமையிலான அரசு உறுதிமொழிக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், கதவணையின் திட்டப்பணிகள் குறித்த அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சி மூலம் பணிகள் நடைபெற்று வரும் விரிவாக்கத்தினை பார்வையிட்டனர். கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் ரூ.70 இலட்சம் மதிப்பீட்டில் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வணிக வளாகம் கட்டடம், நியாய விலைக்கடை செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்குவதை ஆய்வு மேற்கொண்டார்.
தோரணக்கல்பட்டியில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திற்கு ரூ. 2 கோடி மதிப்பீட்டில் நிர்வாக அலுவலக கட்டடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், அரவக்குறிச்சியில் ரூ.110.60 இலட்சம் மதிப்பீட்டில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய கட்டடம் கட்டுமானம், அலுவலக வளாகம் மற்றும் தீயணைப்பு வாகனம் நிறுத்தும் கட்டடப் பணிகள் நடைபெற்று வருவதையும், அரசு உறுதிமொழிக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர், கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் போக்குவரத்துத் துறை, வேளாண்மை துறை கால்நடை பராமரிப்பு துறை. ஊர்க வளர்ச்சித்துறை. தீயணைப்பு மற்றும் மீட்டுப்பணிகள்த்துறை, கூட்டுறவுத்துறை, இந்துசமய அறநிலையத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, எரிசக்தி துறை. குறு சிறு நிறுவனங்கள் துறை. பொதுப்பணித்துறை நீர் வளம்) உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சட்டமன்ற பேரவை உறுதிமொழி பதில்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.
இந்த ஆய்வு கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இணைச் செயலாளர் கருணாநிதி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை துணைச் செயலாளர் ரவி. மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வாணிஈஸ்வரி , வருவாய் கோட்டாட்சியர்கள் (கரூர் )ரூபினா. (குளித்தலை) புஷ்பாதேவி. முதன்மை கல்வி அலுவலர் கீதா. குளித்தலை சிறப்பு திட்ட கோட்ட செயற்பொறியாளர் சாரா, உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.