மே.24.
கரூர் மாவட்டம், காணியாளம்பட்டியில் செயல்படும் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2025-2026 ஆம் கல்வியாண்டில் முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டு டிப்ளமோ படிப்பில் சேர விரும்பும் மாணவ/மாணவியர்கள் www.tnpoly.in என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இணையதளம் மூலம் விண்ணப்பிக்கத் தெரியாதவர்கள் நேரடியாக கல்லூரிக்கு வருகை புரிந்து விண்ணப்பிக்கலாம். இக்கல்லூரியில் அமைப்பியல் துறை (Diploma in Civil Engineering), இயந்திரவியல் துறை (Diploma in Mechanical Engineering) மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை (Diploma in Electrical and Electronics Engineering). மின்னியல் மற்றும் தொடர்பியல் துறை (Diploma in Electronics and Communication Engineering) (Diploma in Computer Engineering), Diploma in Garment Technology & Diploma in Textile Technology (New Course) உள்ளிட்ட டிப்ளமோ படிப்புகள் உள்ளன
விண்ணப்பக் கட்டணம் ரூ.150/- செலுத்த வேண்டும். SC/ST மாணவர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் இல்லை. என் கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.