டிச.27.
திருச்சி – கரூர் – திருச்சி இடையே முன்பதிவில்லா விரைவு ரயில் – 3 மாதத்திற்கு சிறப்பு ரயில்.இயக்கப்படுகிறது. ஞாயிறு சேவை கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை இயக்கப்படும் இந்த ரயில் வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படுகிறது. ஞாயிறு சேவை கிடையாது.
திருச்சியில் இருந்து காலை 5.25க்கு புறப்பட்டு காலை 7.20க்கு கரூர் வந்து சேரும். கரூரில் இருந்து இரவு 8.05க்கு புறப்பட்டு இரவு 10.50க்கு திருச்சி சென்றடையும்.
6 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் திருச்சி, பாலக்கரை, திருச்சி மலைக்கோட்டை, பெட்டவாய்த்தலை, குளித்தலை மற்றும் மகாதானபுரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்என தெரிவிக்கப்பட்டுள்ளது.