அக்28.
கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா மின்னாம்பள்ளி கிராமம் மின்னாம்பள்ளி விநாயகர், குளக்கரை வன்னி அம்மன், கருப்பண்ண சுவாமி, மதுரை வீர சுவாமி, கோயில் மகா கும்பாபிஷேக நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது. யாக சாலை பூஜைகளுக்கு பின்னர் குடமுழுக்கு விழா நடைபெற்றது. மகா தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
முன்னதாக கொங்கு ஒயிலாட்ட குழுவினர் நடத்திய கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஈசன் வள்ளி கும்மி நிகழ்ச்சி நடைபெற்றது.
மின்னாம்பள்ளி வன்னியம்மன் சேவா டிரஸ்ட் தலைவர் அலைடு கணேசன், செயலாளர் ராஜா, பொருளாளர் சிவசாமி, துணைத்தலைவர் காளியப்பன், துணைச் செயலாளர் கந்தசாமி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.