அக்.20.
கரூர் சுங்கேட் மரமில் அருகே கான்கிரீட் மின்கம்பம் மீது அந்த வழியாக வந்த லாரி மோதியது.
நேற்று மாலை இந்த விபத்து நடைபெற்றதும் பாதுகாப்பு கருதி அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நிற்காமல் சென்ற லாரியை பொதுமக்கள் பிடித்து வைத்தனர். மின்சார வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டனர். லாரி உரிமையாளரிடமிருந்து இழப்பீட்டுத் தொகை பெறப்பட்டு உடனே மின் கம்பம் மாற்றும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டனர் . தான்தோன்றி பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட சுங்ககேட் அருகில் லாரி மோதி பழுதான மின் கம்பம் இரண்டு மாற்றி அமைக்கப்பட்டு இரவு 10.30 மணி அளவில் மீண்டும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு விட்டது. மின்சார வாரிய ஊழியர்களுக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.