மே.7.
திமுக ஆட்சி பதவியேற்று.,ஓராண்டு நிறைவை முன்னிட்டுபுதிய 5 அறிவிப்புக்களை சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
- அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி..
- ஊட்டச்சத்து குறைபாடு புள்ளி விபர அடிப்படையில், 6 வயது குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனையும், ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் உரிய உதவி செய்யப்படும்..
- தகைசால் பள்ளிகள் உருவாக்கப்படும்.. 28 மாநகராட்சியில் அரசு பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக மாற்றப்படும்.. கல்வி + கலை + அறிவியல் + கைவினை + விளையாட்டு செயல் என எல்லாம் அதில் இருக்கும்.. தனித்திறமை விரிவாக்கம் செய்யப்படும்.. டெல்லியில் இதை பார்த்தது, இனி தமிழகத்தில் செயல்படுத்தப்படும்..
- நகர்ப்புற மருத்துவமனைகள் உருவாக்கம்.. மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் புதிய நகர்ப்புற மருத்துவமனைகள் உருவாக்கப்படும்..
- உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, 234 தொகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும்.. மக்களின் குறைகள் தமிழ்நாடு முழுவதும் தீர்க்கப்படும்.. சட்டமன்ற உறுப்பினர்கள் பரிந்துரையில் குறைகள் தீர்க்கப்படும், முதலமைச்சர் கண்காணிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.