மே.17.
21 சிறந்த எழுத்தாளர்களுக்கு பரிசுத்தொகை, பாராட்டுச்சான்றிதழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதல்வரிடம் கருவூர்கன்னல் பரிசு பெற்றார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துறைசார்ந்த 21- எழுத்தாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும், பரிசுத்தொகையும் வழங்கினார்.
இதில் கவிஞர், புலவர், நகர்மன்ற மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் கருவூர்கன்னலும் பரிசு பெற்றார். ஏற்கனவே பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்று பெருமை சேர்த்த கருவூர்க் கன்னல் தற்போது மீண்டும் பெருமை பரிசு பெற்று பெருமை சேர்த்துள்ளார். கருவூர் திருக்குறள் பேரவை சார்பில் அவருக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவிப்பதாக மேலை பழநியப்பன் தெரிவித்துள்ளார்.