ஜூலை.16.
கரூரில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் சிலர் பத்திரப் பதிவு செய்ததாக மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் அளித்த புகாரில் கரூர் நகர காவல் நிலைய போலீசார் 7 நபர்கள் மீது 8 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தன்னையும் குற்றவாளியாக சேர்த்து போலீசார் கைது செய்ய கூடும் என்ற அச்சத்தில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கடந்த 40 நாட்களுக்கு மேல் தலைமறைவாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் விஜயபாஸ்கர் கடந்த 12ம் தேதி கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு கடந்த 25-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், 22 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் எம் ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி சேகர் உள்ளிட்டோர் தன்னை அடித்து, உதைத்து போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்து பறித்துக் கொண்டதாகவும் அதை மீட்டுத் தரக்கோரி வாங்கல் நிலையத்தில் பிரகாஷ் என்பவர் புகார் மனு அளித்தார்.
இந்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி சேகர் உள்ளிட்ட 13 பேர்கள் ம 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில்,
தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் உடன் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டி உள்ளதால் தனக்கு இடைக்கால முன் ஜாமின் வழங்க கோரி மீண்டும் கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் முன்ஜாமீன் கோரி விஜயபாஸ்கர் மீண்டும் மனுதாக்கல் செய்தார். இதனிடையே விஜயபாஸ்கர் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர். இந்நிலையில் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கோர்ட் உத்தரவிட்டது. இதனிடையே உயர்நீதிமன்றத்தில் தனது தந்தைக்கு உடல் நலம் சரியில்லை உடன் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும் எனவே முன்ஜாமின் தரக்கோரி விஜயபாஸ்கர் அவரது தம்பி சேகரும் மனு தாக்கல் செய்தனர். மனு விசாரணைக்கு வரும் என்கிற நிலையில் விஜயபாஸ்கர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
கரூரில் உள்ள கட்சி நிர்வாகிகளிடம் விஜயபாஸ்கர் இருக்கும் இடம் குறித்து சிபிசிஐடி போலீசார் கடந்த சில நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே கேரளாவில் விஜயபாஸ்கர் இருந்த இடத்தை போலீசார் கண்டுபிடித்து இன்று அவரை கைது செய்துள்ளனர்.