ஜன.26.
கரூர் அருகே உள்ள வாங்கல் காவிரி கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ புது வாங்கலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று விமரிசையாக நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் யாக சாலையில் சிறப்பு யாகங்கள் நடத்தி சிறப்பு பூஜை செய்தனர். புண்ணிய தீர்த்தத்திற்கு மலர்களால் நாமாவளி செய்து தீப தூபங்கள் காண்பிக்கப்பட்டு ஆலயத்தைச் சுற்றி வலம் வந்தனர் . கோபுரத்தைச் சென்றடைந்ததும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது .
https://www.facebook.com/groups/507648760185959/permalink/1232670974350397/?mibextid=Nif5oz
மலர் தூவ ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஹெலிகாப்டர் இருந்து பக்தர்கள் மீது மலர் தூவப்பட்டது. புனித தீர்த்தம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடிபாட்டு மக்கள் இதில் கலந்து கொண்டனர் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.