ஜன.21.
முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பதவியில் இருந்தபோது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி சொத்து சேர்த்ததாக புகார்கள் வந்ததை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர் . அன்பழகன் குடும்பம் சொத்துக்களை குவித்தது தெரியவந்தது.மேலும் குவாரி தொழிலில் பல்வேறு முறைகேடு செய்து அவரது குடும்பத்தினர் பணம் சம்பாதித்தது தெரியவந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எந்த சொத்தும் இல்லை என கணக்கு காட்டிய அவரது மகனுக்கு பங்களாக்கள் பல கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பது அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்தது. மேலும்கரூர் கனிம வளத்துறை அதிகாரியும் இந்த சோதனையில் சிக்கி உள்ளார். கரூர் கனிமவளத்துறை துணை இயக்குனர் ஜெயபால்வீடு சேலம் இரும்பாலை ராசி நகரில் உள்ளது.இவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர் . இவர் தர்மபுரி மாவட்டத்தில் கனிமவளத் துறை அதிகாரியாக பணியாற்றிய போது அன்பழகனுக்கு நெருக்கமாக இருந்ததாகவும் கிரானைட் குவாரி முறைகேட்டில் ஈடுபட்டு சொத்து குவித்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
அன்பழகன் அமைச்சராக இருந்தபோது தர்மபுரி மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனராக ஜெயபால் பணியாற்றியுள்ளார். அப்போது அன்பழகனுக்கு சாதகமாக கிரானைட் குவாரி முறைகேடுகளில் இவர் ஈடுபட்டதாக தெரிகிறது. ஜெயபால் வீட்டில் ரூ 40 லட்சம் ரொக்கம் ரூ.9லட்சத்திற்கு நகை வாங்கியதற்கான ரசீது, ரூ 20 லட்சம் வங்கி இருப்பு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.