நவ.7.
கரூர் வடக்கு நகர அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான விஜயபாஸ்கரின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் பாண்டியன். இவர் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் . மின்சாரத் துறை அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி உடன் இருந்தார்.
அமைச்சர் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற இந் நிகழ்வில் மேலும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் என 30க்கும் மேற்பட்ட வடக்கு நகர அதிமுகவினர் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.