மார்ச்.4.
கரூரில் தற்போது உள்ள கரூர் முத்துக்குமாரசாமி பேருந்து நிலையம் 1987 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது 37 ஆண்டுகளாக பேருந்து நிலையம் மாற்றப்படவில்லை. 1995 ஆம் ஆண்டு கரூர் மாவட்டமாக அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பேருந்து நிலையம் மாற்றப்படவில்லை.
1996 ஆம் ஆண்டு முதல் கரூர் முத்துக்குமாரசாமி பேருந்து நிலையத்தை மாற்றி புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்து வந்தது . தற்போதுள்ள வாகன பெருக்கம், பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்த பேருந்து நிலையம் இல்லை. பயணிகள் நெரிசலில் அவதிப்பட்டு வந்தனர். 26 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோரிக்கை நிறைவேற்றபடும் விதமாக, கரூர் திருமாநிலையூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் உத்தரவிட்டார்.
கரூர் மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கரூர் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதன்பின்னர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அவர் திருமாநிலையூரில் நடைபெற்று வரும் பேருந்து நிலையம் கட்டுமான பணிகளை இன்று பார்வையிட்டார் . பணிகள் குறித்து ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜி, கலெக்டர் பிரபுசங்கர், எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா, மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.