ஜன.29.
நூற்றாண்டு கடந்த கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா, ஆண்டு விழா மற்றும் நூற்றாண்டு நினைவு தூண் கட்டும் பணி தொடக்க விழாவை முப்பெரும் விழாவாக வருகின்ற 02/02/2025 ஞயிற்றுக்கிழமை அன்று மாலை 4 மணியளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகள் குறித்து இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்தில் விழா நிர்வாகிகள் விசா சண்முகம், இந்திரமூர்த்தி, சூரிய நாராயணன், அப்னா தனபதி மற்றும் முதன்மை ஒருங்கிணைப்பாளர்கள் தலைமை ஆசிரியர் .ரேவதி, உதவி தலைமை ஆசிரியர் சரவணன், முனைவர் ராஜன் , முனைவர் ராஜேந்திரன், உடற்கல்வி ஆசிரியர் மாகமுனி, ஆசிரியர் சேரலாதன், முன்னாள் மாணவர் மன்றம் சுசீந்திரகுமார், ஆலோசகர்கள் முன்னாள் தலைமை ஆசிரியர்கள் ஜான், சிவராஜ், மாநகராட்சி உறுப்பினர்கள் சாலை ரமேஷ், வளர்மதி சம்பத், மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.