பிப்.29.
கரூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. மேயர் கவிதா கணேசன் பட்ஜெட் தாக்கல் செய்தார். துணை மேயர் தாரணி சரவணன், ஆணையர் சுதா முன்னிலை வகித்தனர். கீழ்க்கண்ட பணிகள் மாநகராட்சியில் நடைபெற்று வருகிறது-
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் காமராஜ் தினசரி மார்க்கெட் மேம்பாட்டு பணிகள்- குளத்துப்பாளையம் மீன் மார்க்கெட் அமைத்தல் உட்கட்டமைப்பு வசதிகள் திட்டம் -புதிய பேருந்து நிலையம் கட்டுதல்- மோகனூர் முதல் வாங்கல் சாலை காமதேனு நகர் வழியாக என்.எச்.சாலை வரை இணைப்பு சாலை அமைத்தல்- மழை நீர் வடிகால் மற்றும் சாலை மேம்பாடு- சிறப்பு நிதி திட்டத்தில் எல்என்எஸ் கிராமம் இனாம் கரூர் பகுதியில் மண்டலம் 1 புதிய அலுவலகம், பசுபதிபுரம் தெற்கு மட வளாகம் மண்டலம் 2 புதிய அலுவலகம்- சணப்பிரட்டி பகுதியில் மண்டலம் 3 புதிய அலுவலகம் கட்டும் பணிகள்- தேசிய சுகாதார இயக்ககம் திட்டத்தின் கீழ் என் எஸ் கே நகர்- பசுபதிபாளையம்- புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுதல்- மத்திய நிதி குழு மானிய திட்டத்தில் நகர்புற நல வாழ்வு மையங்கள் சணப்பிரட்டி -வடிவேல் நகர்- அரி காரம் பாளையம்- நந்தனம் பகுதியில் நடைபெற்று வருகிறது. புதிய எல்ஈடி தெரு மின்விளக்குகள் பொருத்துதல் – தூய்மை இந்தியா திட்டத்தில் கழிப்பறைகள் கட்டுதல் -வாங்கல் அரசு காலணி உரக்கடங்கில் பணிகள்- உயிரி அகழ்வாய்வு முறையில் பணிகள்- வார்டுகளில் உள்ள தெரு மின் விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றுதல்-நமக்கு நாமே திட்டத்தில் திருவள்ளுவர் மைதானம் மேற்கு பகுதியில் மாவட்ட நூலகம்- தாந்தோணி பழைய எஸ்பி அலுவலக இடத்தில் பணிபுரியும் பெண்களுக்கான விடுதி கட்டுதல்- கலெக்டர் வளாகத்தில் அறிவியல் பூங்கா அமைத்தல் அம்ரூட் திட்டத்தில் பூங்கா- நகர்ப்புற சாலைகள் அமைக்கும் பணிகள் ரூ.145.27 கோடியில் நடைபெற்று வருகிறது.
நடப்பாண்டில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகள் விபரம்-
பொது நிதியில் இரண்டு பூங்காக்கள்-எம்பி எம்எல்ஏ தொகுதி மேம்பாடு நிதி குழு மானியத் திட்டம் உட்கட்டமைப்பு அடிப்படை வசதிகள் செய்தல்- கல்வி நிதியில் மேம்பாட்டு பணிகள் மாநகராட்சி பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைத்தல்- குடிநீர் அபிவிருத்தி- புதிதாக இணைக்கப்பட்ட மற்றும் விடுபட்ட பகுதிகளுக்கு ஒருங்கிணைந்த பாதாள சாக்கடை திட்டம் -சாலை வடிகால் மற்றும் சிறு பலங்கள் 40 எண்ணிக்கையில் அமைப்பது- அம்ருத் திட்டம் பூங்கா அமைத்தல் – பழைய பேருந்து நிலையத்தில் பராமரிப்பு பணிகள்- பழைய பேருந்து நிலையத்தின் காய்கறி அங்காடி -புதை வடிகால் மற்றும் இயக்குதல் மற்றும் பராமரிப்பு செய்தல்- குடிநீர் இயக்குதல் மற்றும் பராமரிப்பு- மாநகராட்சி அலுவலகம் மற்றும் வணிக வளாகம் பொது சுகாதார வளாக கட்டிடங்கள் பராமரிப்பது- சாலை பராமரிப்பு வடிகால் மற்றும் சிறு பாலம் பராமரிப்பு பணிகள் என ரூ.670.32 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
மக்கள் பிரதிநிதிகள் விருப்பப்படி அனைத்து பகுதி மக்களுக்கும் எல்லா அத்தியாவசிய வசதிகளும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சாலை- தெரு விளக்கு- வடிகால் மற்றும் சுகாதார வசதிகள் -திடக்கழிவு மேலாண்மை பணிகள்- குடிநீர் வசதி மற்றும் புதை வடிவால் வசதிகள் அனைத்து வார்டுகளுக்கும் சமமாக முக்கியத்துவம் கொடுத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது சுகாதாரம் பூங்காக்கள் சந்தைகள் மாநகராட்சி நிதி ஆதாரமாக உள்ள புதிய சொத்து வரி -புதிய குடிநீர் இணைப்பு- புதை வடிகால் அமைத்தல் மற்றும் மத்திய- மாநில அரசுகளின் மானிய உதவி திட்ட கடன் ஆகியவற்றின் மூலம் மாநகராட்சி மக்களுக்கு அனைத்து வசதிகளையும் தங்கு தடை செய்வது இயலும் என நம்புகிறது. இதற்கான அனைத்து தரப்பு மக்களின் ஒத்துழைப்புகளையும் பொது சேவை நிறுவனங்கள் ஒத்துழைப்பையும்- முழுமையாக சரியான நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்ட வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளதால் அதிக அளவில் செலவினம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தி வருவாய் இழப்பினை தவிர்த்து வருவாயை அதிகரிக்க நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனால் நிதி நிர்வாகம் கட்டுப்பாட்டுடன் இருக்கவும். அவசியமான மக்கள் நல பணிகளை மேற்கொள்ளவும் வழிவகை ஏற்பட ஏதுவாகும்.
கரூர் மாநகராட்சியில் மொத்த வரவுகள் ரூ.75904.44 லட்சம். மொத்த செலவுகள் ரூ.77471.14 லட்சம் ஆகும்.
வருவாய் நிதி வரவு ரூ.62034.80 லட்சம். செலவு ரூ.64268.74 லட்சம். குடிநீர் நிதி வரவு ரூ. 13100.37 லட்சம். ஆரம்ப கல்வி நிதி செலவு ரூ.12843.30 லட்சம்.
ஆரம்பக் கல்வி நிதி வரவு ரூ. 769.27 லட்சம். செலவு 359. 10 லட்சம். இவ்வாறு மேயர் கவிதா கணேசன் தெரிவித்தார்.