ஏப்.3.
கரூர் எம்பி தொகுதி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த பொதுத்தேர்தலில் 1,670 வாக்குச்சாவடிகளில், 7,666 வாக்குபதிவு இயந்திரங்கள் பயன்படத்தப்படவுள்ளன. 9,073 அரசு அலுவலர்கள் வாக்குப் பதிவு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
கரூர் தொகுதி எம்.பி. தேர்தல் பொதுப் பார்வையாளர் ராகுல் அசோக் ரெக்காவர் தலைமையில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் முன்னிலையில் வாக்குப் பதிவு பணி அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீட்டிற்கான இரண்டாம் கட்ட கணினி முறை சுழற்சி (Randomization ) நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் தெரிவித்ததாவது.:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைக்கிணங்க வருகின்ற 19.04.2024 அன்று வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு 54 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அரவக்குறிச்சியில் 2,09.224 வாக்காளர்கள், கரூரில் கிருஷ்ணராயபுரத்தில் 2,08,997 வாக்காளர்கள். 2,36,110 வாக்காளர்கள். மணப்பாறையில் 2,78,379 வாக்காளர்கள். விராலிமலையில் 2,20,359 வாக்காளர்கள். வேடசந்தூரில் 2.69.159 வாக்காளர்கள் என மொத்தம் 14.22,228 வாக்காளர்கள் உள்ளனர். வாக்குப்பதிவிற்காக 1.670 வாக்குச்சாவடிகளில் 7,666 மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 9.073 அரசு அலுவலர்கள் வாக்குப் பதிவு பணியில் ஈடுபட உள்ளனர்.
வாக்குப் பதிவு நாளன்று பணியில் ஈடுபடவுள்ள அரசு அலுவலர்களுக்கு இரண்டு கட்டமாக கணினி சுழற்சிமுறையில் (Randomization) பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை சட்டமன்ற தொகுதியில் வாக்குப் பதிவு பணியில் ஈடுபடவுள்ள 5145 அலுவலர்களுக்கு கணினி சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் தொடர்பான புகார்களுக்கு கரூர் சட்டமன்ற தொகுதிக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முகமதுபைசல் – 9445000453 என்ற கைபேசி எண்ணிலும், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கருணாகரன் (9442138570) என்ற கைபேசி கைபேசி எண்ணிலும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஸ் (9445000265) என்ற கைபேசி எண்ணிலும்.
வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசித்திரகலா (9445000321) என்ற கைபேசி எண்ணிலும். மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தவச்செல்வம் (9524290626) என்ற கைபேசி எண்ணிலும், விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தெய்வநாயகி (9445461803) என்ற கைபேசி எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.
மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை 04324 255016, 17.18.19 ஆகிய தொலைபேசி எண்களிலும் மற்றும் 1800 425 5016 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், C Vigil செயலியிலும் புகார் அளிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்)சையது காதர், தேர்தல் வட்டாட்சியர் முருகன் உடனிருந்தனர்.