மார்ச்.31.
வேட்பாளர்கள் என்னிக்கை அதிகம் உள்ளதால் கூடுதலாக வாக்குப்பதிவு இயந்திரம் (Ballot Unit வழங்குவதற்கு கணினி முறை குலுக்கலை (RANDOMIZATION) தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான தங்கவேல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது. கரூர் எம்.பி. தொகுதியில் அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு எந்தெந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட கூடுதல் கணினி முறை குலுக்கல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
எம்பி தொகுதி தேர்தல் அதிகாரியும், கரூர் மாவட்ட கலெக்டருமான தங்கவேல் கூறுகையில்,
கருர் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவிற்காக 1051 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. .5135 வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். கணினி முறையிலான முதல்கட்ட குழுக்கல் நடத்தப்பட்டு 1260 கட்டுப்பாட்டு இயந்திரம் (control Unit ), 1270 வாக்குப்பதிவு இயந்திரம் (Ballot Unit), வாக்கினை சரிபார்க்கும் இயந்திரம் 1365 (VVPAT) சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு வழங்கப்பட்டது.
தற்போது வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு கரூர் மக்களவை தொகுதியில் 54 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதற்காக மேலும் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் கூடுதலாக 3 வாக்குப்பதிவு இயந்திரம் (Ballot Unit) வழங்கப்பட உள்ளதால் அதற்கான கூடுதல் கணினி முறையிலான குலுக்கல் இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது. அதன்படி கரூர் மாவட்டத்திற்கு இன்று 3132 ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் (Ballot Unit) சமந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது என்றார்.
தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுளை பாதுகாப்பு அறை சீல் அகற்றப்பட்டு அங்கீகிரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் கணினிமுறை குலுக்கல் அடிப்படையில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு 909. கரூர் சட்டமன்ற தொகுதிக்கு 963, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு 936. குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு 324 என மொத்தம் 3132 வாக்குப்பதிவு இயந்திரம் (Ballot Unit )பிரிக்கும் பணிகள் துவக்கப்பட்டது. தொகுதிவாரியாக இயந்திரங்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படும். மாவட்டவருவாய் அலுவலர் கண்ணன், தேர்தல் அலுவலர்கள் சையதுகாதர், இளங்கோ, திருமுருகன் கலந்து கொண்டனர்.