ஜூன்.4.
கரூர் எம்.பி. தொகுதிக்குட்பட்ட கரூர் சட்டமன்ற தொகுதியில் 269 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 14 மேஜைகளில் 20 சுற்றுகளாக எண்ணிக்கை தொடங்கியதது, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 260 வாக்குச்சாவடி, 14 மேஜைகளில் 19 சுற்றுகள், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி 253 வாக்குச்சாவடிகள். 14 மேஜைகளில் 19 சுற்றுகள். மணப்பாறை சட்டமன்ற தொகுதி 324 வாக்குச்சாவடிகள். 14 மேஜைகளில் 24 சுற்றுகள், விராலிமலை சட்டமன்ற தொகுதி 255 வாக்குச்சாவடிகள். 14 மேஜைகளில் 19 சுற்றுகள். வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி 309 வாக்குச்சாவடிகள். 14 மேஜைகளில் 23 சுற்றுகள் எண்ணப்பட்டு வருகிறது.
85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மாற்றுத்திறனாளிகள், தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் என மொத்தம் 7.708 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. தபால் வாக்குகள் அனைத்தும் தேர்தல் பொதுப்பார்வையாளர், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
கரூர் தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் ஜோதிமணி முன்னிலை வைக்கிறார். காங்கிரஸ் ஜோதிமணி 24, 922 வாக்குகள். அதிமுக தங்கவேல் 21,977. ஜோதிமணி 2945 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.