மே.17.
கரூர் அருள்மிகு மாரியம்மன் திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கரூர் அமராவதி ஆற்றுக் கரையிலிருந்து சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கம்பம் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்து நடப்பட்டது. பக்தர்கள் புனித நீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர்.
பூச்சொரிதல் விழா 16ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்கள் ஆனோம் மின்விளக்களாலும் அலங்கரிக்கப்பட்டு பூத்தட்டு ரதங்கள் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்ததும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேளதாளம் பேண்டு வாத்தியங்கள், நடனம் கலை நிகழ்ச்சிகளுடன், விடிய விடிய பூத்தட்டு ரதங்கள் வந்தன. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வழிநடக குழுமி இருந்து வழிபட்டனர். 18ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 26 ஆம் தேதி திருத்தேர் விழாவும் நடைபெறுகிறது. 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் மகா சண்டி யாக பெருவிழாவும், 26 , 27 தேதிகளில் பக்தர்கள் அக்கினி சட்டிஎடுத்து வந்தும், அலகு குத்தியும் நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சியும், 25 26 27 ஆம் தேதிகளில் பால்குடம் மாவிளக்கு எடுத்து வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். 28ஆம் தேதி கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.