ஜூன்.9.
கரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (http://skiitraining.tn.gov.in/DET/) என்ற இணையதளம் மூலமாக இணைய வழி சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கவேண்டியகடைசி நாள்: 13.06.2025. சேர்க்கைக்கு 19.05.2025 முதல் கரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரில் வந்தும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
கரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கீழ்க்கண்ட தொழிற்பிரிவுகள் 1. Sewing Technology (தையல் தொழிற்நுட்ப பயிற்சி ) 6-ம்வகுப்பு மற்றும் 10-ம்வகுப்புதேர்ச்சி, பயிற்சிகாலம் -1 ஆண்டு (மகளிர்மட்டும்). 2.Desktop Publishing Operator (கணினிதொழிற்நுட்பபயிற்சி), 10-ம் வகுப்பு தேர்ச்சி, பயிற்சிகாலம்-1 ஆண்டு (மகளிர்மட்டும்). 3.Mechanic Auto Body Repaire 10-ம்வகுப்புதேர்ச்சி, பயிற்சிகாலம்-1 ஆண்டு (ஆண்/பெண் இருபாலரும்), 4. Operator Advanced Machine Tools 10-ம் வகுப்புதேர்ச்சி, பயிற்சி காலம் -2 ஆண்டு (ஆண்/பெண் இருபாலரும் ) அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை, இலவச பேருந்து கட்டண சலுகை, மிதிவண்டி, வரை படக் கருவிகள். பாடப்புத்தகங்கள். சீருடைகள். காலணிகள் அரசால் வழங்கப்படும். மேலும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களின் சேர்க்கை தொடர்பான கூடுதல் விபரங்களை கரூர். அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை தொலைபேசி (04324-222111, 9499055711, 9499055712) வாயிலாக அல்லது நேரில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளுமாறு கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.