டிச.20.
கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவின் பேரில் நேற்று நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பிரபு சங்கர் தேர்தல் நடத்தினார் . திமுக உறுப்பினர்கள்6 பேர், அதிமுக உறுப்பினர்கள் 5பேர் பங்கேற்றனர். தேர்தல் முடிந்த பிறகு அதன் முடிவுகள் வீடியோ பதிவுடன் சீல் இடப்பட்ட அறிக்கை கோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தேர்தல் நடைபெறுவதையொட்டி நூற்றுக்கணக்கான போலீசார் கலெக்டர் அலுவலக முன்பு குவிக்கப்பட்டிருந்தனர். திமுக அதிமுகவினர் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. செருப்புகள் வீசப்பட்டன. எஸ்.பி. சுந்தரவதனம் தலைமையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இரு தரப்பினரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
மாவட்ட ஊராட்சி துணைத் தலைவருக்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட திருவிகா கடத்தப்பட்டதாக புகார் தெரிவித்தனர். முன்னாள் அமைச்சரும், மாவட்ட அதிமுக செயலாளருமான விஜயபாஸ்கர் காரில் வந்த போது ஒரு கும்பல் வழிமறித்து தன்னை கடத்தி சென்றதாகவும், தாக்கியதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவிக கூறினார். கரூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கரூர் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தலில் நடத்தக்கோரி தாக்கல் செய்த மனு விசாரணை தொடர்பாக மதுரை உயர் நீதிமன்ற கிளையில், அவரது வழக்கறிஞர் ஆஜராகி அதிமுக கவுனிசிலர்கள் ஆறு பேர் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் தங்கி இருந்தனர் .தேர்தலில் பங்கேற்பதற்காக நேற்று காரில் வந்தனர். துணைத் தலைவர் பதவி வேட்பாளர் திருவிகாவை காரை மறித்து தாக்குதல் நடத்தி ஒரு கும்பல் கடத்தி சென்றது. நீதிமன்றம் தலையிட்டு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பான மனு வரும் 22ம் தேதி விசாரணைக்கு வரும்போது தங்களது தரப்பில் விளக்கத்தை தாக்கல் செய்யலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது.