அக்.18.
கரூர் மாவட்ட புதிய கலெக்டராக மீ.தங்கவேல் பொறுப்பேற்றுக் கொண்டார். துணை ஆட்சியர் பயிற்சி முடித்து விட்டு 2006, 2007, 2008 ஆம் ஆண்டில் விழுப்புரம் மாவட்டத்தில் வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்தார். தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலராகவும், திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர். சென்னை சுகாதாரத் துறையில் மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவை கழகம், சிப்காட் நிறுவனம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையில் பணிபுரிந்தும் அதன்பிறகு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் இணை இயக்குனர் மற்றும் திட்ட இயக்குனராகவும் பணிபுரிந்தார்.
செய்தியாளர்களிடம் கூறுகையில், திட்டங்களைப் பொருத்தவரையில் தமிழ்நாடு அரசு முன்னுரிமை திட்டங்கள். நீர் ஆதாரத்திட்டங்கள் முன்னுரிமை அளித்து பணியாற்றுவேன். மேலும், பொதுமக்களின் கோரிக்கைகளை தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என கலெக்டர் மீ.தங்கவேல் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை வாணிஈஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தண்டயுதபாணி, அலுவலக மேலாளர் (பொது) பிரபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.