அக்.1.
கரூர் மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள சங்க கூட்டம் இன்று கரூரில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசினார்.
உள்ளாட்சிபிரதிநிதிகளுக்கு நிதி ஒதுக்குவதில் அரசு பாரபட்சம் காட்டுவதால் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மக்கள் நலப் பணிகள் செய்ய முடியாத நிலை நிலவி வருகிறது. இதனை தமிழக அரசிடம் எடுத்துரைப்பதற்காக தமிழகத்தில் முதன்முறையாக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்காக கரூர் மாவட்டத்தில் இக்கூட்டம் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டது.