அக்.23.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு தலைவர் வேல்முருகன் தலைமையில் அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசு உறுதிமொழிக்குழு தலைவர் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையில், மாவட்ட கலெக்டர் தங்கவேல், அரசு உறுதிமொழிக்குழு உறுப்பினர்களான சட்டமன்ற உறுப்பினர்கள் அரவிந்த் ரமேஷ் (சோழிங்கநல்லூர்). அருள்(சேலம் மேற்கு). சீனிவாசன்(விருதுநகர்), பூமிநாதன்மதுரை (தெற்கு) மாங்குடி(காரைக்குடி). மோகன் (அண்ணா நகர்) ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு தலைவர் தெரிவித்ததாவது.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 2024-2025 ஆம் ஆண்டுகளுக்கான அரசு உறுதி மொழிக் குழு கரூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள அரசு உறுதி மொழிகள் மீது தொடர்புடைய துறைகளின் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
புகழூர் தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தில் ரூ.10கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் மேம்பாட்டு பணிகளையும்,நஞ்சை புகளூரில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.406 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கதவணை, சுக்காலியூர் ஆவின் நிறுவனத்தில் புதிதாக விரிவாக்கம் செய்யபட்டுள்ள பால் பண்ணை, அதனைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் கியூ பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு ரூ. 1.06 கோடி மதிப்பீட்டில் கட்டப்ட்டு வரும் புதிய அலுவலக கட்டுமானப்பணிகளையும், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெளி மற்றும் உள் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கருர் பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைகளின் சுகாதாரம் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டு கழிவறைகளை சுகாதாரமாக வைத்துக்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் விற்கப்படும் உணவுப்பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என உறுதி மொழிக்குழு தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில். மாவட்ட எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி. சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் (குளித்தலை), இளங்கோ (அரவக்குறிச்சி), சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், மாவட்ட வருவாய் அலுவலர்கள் கண்ணன். விமல்ராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், மகளிர் திட்ட இயக்குநர் பாபு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யுரோகா, சட்ட மன்றப் பேரவை துணைச்செயலாளர் ஸ்ரீராரவி, சார்புச் செயலாளர் பியூலஜா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.