மே.14.
தமிழ்நாட்டில் மாணவ மாணவியர்களின் எதிர்கால குறிக்கோள் திட்டமிட்டு அமையும் வகையிலும், வெற்றி அடைய வழிவகை செய்யும் வகையிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில், உயர் கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது. கல்வி வல்லுனர்கள் மாணவ மாணவியருக்கு ஆலோசனை வழங்கும், உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி கரூர் கொங்கு மன்றத்தில் நடைபெற்றது. கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மீ. தங்கவேல் தலைமை வகித்து பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பேசியதாவது-
12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் தங்களின் எதிர்கால கனவினை நனவாக்கும் வகையில் அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பாடவாரியான பட்டப்படிப்புகள். பட்டயப்படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதையும், கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதையும், மேற்படிப்பினை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் போட்டித் தேர்வுகள் மற்றும் தொழில் வழிகாட்டல் உதவித்தொகை ஊக்கப்படுத்துதல், பெறுதல் வங்கிக்கடன் விவரங்களை அறியும் வகையில் தலைசிறந்த வல்லுநர்கள், கல்வியாளர்களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது.
கல்லூரி கனவு” நிகழ்ச்சி இத்தருணத்தில் மாணவ. மாணவியர்களுக்கு மிகுந்த பயனுள்ள நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் 5 இடங்களில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் 58 அரசு பள்ளிகளில் இருந்து 4,000 மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு வங்கிகள் மூலம் மாணவ- மாணவியர்களுக்கு உயர்கல்வி பயில கல்விக் கடன் வழங்க ரூ.24 கோடி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. . முன்னேறிவரும் அறிவியல் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாணவ, மாணவியர்கள் தங்களது திறன்களை எவ்வாறு மென்மேலும் வளர்த்துக்கொள்ளலாம் என்பதை அறிந்து கொள்ள வெண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட எஸ்.பி. முனைவர் கி.பிரபாகர், டி.ஆர்ஓ. கண்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி, தனித்துணை ஆட்சியர் சைபுதின் உள்ளிட்ட அரசு துறை உயர் அலுவலர்கள், துறை வல்லுநர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.