ஜூன்.1.
கூட்டுறவுத்துறையின் கீழ் 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 10இன் கீழ் புதியதாக கரூர் மாவட்ட ஒப்பந்த பணியாளர்கள் கூட்டுறவுசங்கம் என்ற புதியசங்கம் 22.08.2023 தேதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பதிவுசான்றிதழை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர். சங்க உறுப்பினர்களுக்கு வழங்கினார்.
கூட்டுறவுத்துறையின் கீழ் கரூர் மாவட்டத்தை செயல் எல்லையாகக் கொண்டு ஒய்.கே.168, கரூர் மாவட்ட ஒப்பந்த பணியாளர்கள் கூட்டுறவு சங்கம் புதிய சங்கம் கரூர் மாவட்டத்தில் செயல்படும் அணைத்து மத்திய, மாநில அரசுத்துறை மற்றும் மாநில அரசு சார்ந்த நிறுவனங்கள். அரசு அலுவலகங்கள், அரசு கழகங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், பள்ளிகல்லூரிகள், வாரியங்கள், மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மத்திய அரசு சார்ந்த தனியார் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில்
கணினி இயக்குபவர், எழுத்தர், அலுவலக உதவியாளர். காவலர், தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர், விற்பனையாளர், கட்டுநர். வீட்டு வேலை செய்பவர். சமையல்காரர். சலவைத் தொழிலாளி. ஆசிரியர். தையல்காரர். மருந்தாளுநர், வேதியியலாளர், அரவையாளர். இயந்திரங்கள் இயக்குபவர், ஆய்வக உதவியாளர், நகை மதிப்பீட்டாளர் போன்ற வேலைகளை ஒப்பந்த அடிப்படையில் பெறும்.
அப்பணிகளை சங்கத்தில் உறுப்பினராகவுள்ள வேலையில்லா இளைஞர்களுக்கு பணிவழங்கிடுவதை நோக்கமாக கொண்டு செயல்படவுள்ளது. ஆகவே. இச்சங்கத்தின் சேவைகளை பயன்படுத்திக்கொள்ளும் நிறுவனங்கள் சங்கத்தை எண்.9, அருண்டவர், ஆதிகிருஷ்ணபுரம் கரூர் என்ற முகவரியில் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கரூர் மண்டல கூட்டுறவுச்சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா,கரூர் சரக துணைப்பதிவாளர் .பாஸ்கரி உடனிருந்தனர்.