நவ.23.
https://www.facebook.com/share/v/19ReGg9FZB
அரசு பள்ளி மாணவ – மாணவிகளிடம் கலைத்திறனை மேம்படுத்தும் நோக்கில் “சங்கமிப்போம் சமத்துவம் படைப்போம் ” என்ற தலைப்பிலும், “சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு ” என்ற மையக் கருத்தில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற 1009 மாணவ மாணவியர்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி சொந்த செலவில் சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பைகளை வழங்கினார். கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து பேசினார்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் இரண்டரை மணி நேரம் மேடையில் நின்று அனைத்து மாணவ மாணவியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தனது கரங்களால் சான்றிதழ் மற்றும் கோப்பைகளை அமைச்சர் வழங்கினார்.
அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ – மாணவியர்களின் கலைத்திறனை மேம்படுத்தும் வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆண்டுதோறும் கலைத்திருவிழா என்ற நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, 1 முதல் 5 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் இப்போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
கலைத்திருவிழாவில் பேச்சுப்போட்டி, பாட்டு போட்டி, ஓவிய போட்டி, இசைக்கருவிகள் வாசித்தல், சிற்பம் செதுக்குதல் என தனித்திறனை ஊக்கப்படுத்தும் வகையில் 84 போட்டிகள் நடத்தப்பட்டது. வட்டார அளவில் மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவ – மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டது.
கடந்த 2022 – 23 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் மாநில அளவில் முதலிடம் பெற்ற 32 மாணவ மாணவியர்கள், இரண்டாமிடம் பெற்ற 28 மாணவ மாணவ – மாணவியர்கள் மற்றும் மூன்றாமிடம் பெற்ற11 மாணவ மாணவிகளை பாராட்டும் வகையில், மாணவர்களுக்கு கலையரசன் என்றும் மாணவியருக்கு கலையரசி என்ற பட்டமும் தமிழக முதலமைச்சரால் வழங்கப்பட்டது.
மாநில அளவில் வெற்றி பெற்றவர்களை தர வரிசையில் அரசு செலவில் துபாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அடுத்த ஆண்டு அரசு உதவி பெறும் பள்ளியிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது.
கரூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் நடத்தப்பட்ட கலைத் திருவிழாவில் 63,405 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில், 30,560 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர். வட்டாரப் பள்ளிகள் அளவில் 5,329 மாணவ மாணவிகள் பங்கேற்றத்தில் 3,266 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர். மாவட்ட அளவில் 1,547 பங்கேற்றதில் 966 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர். இதில் 43 மாற்றுத்திறனாளிகள் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் சுமார் இரண்டரை மணி நேரம் மேடையில் நின்றவாறு அனைத்து மாணவ, மாணவிகளையும் ஊக்கப்படுத்தும் வகையில் சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், டி ஆர் ஓ. கண்ணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் சுதா, மண்டல குழு தலைவர்கள் கனகராஜ், கோல்ட் ஸ்பாட் ராஜா, அன்பரசன், சக்திவேல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுகானந்தம் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.