மே.16.
கரூர் மாவட்டம், நகர உட்கோட்டம், தாந்தோணிமலை காவல் சரகம், ராயனூர் பகுதியில் வசித்துவரும் கணபதி, வயது 34/25, அன்பு நகர் 2வது தெரு, ராயனூர், கரூர் என்பவர் இன்ஸ்டாகிராமில் மோசடியாக வெளியிடப்பட்ட போலியான விளம்பரத்தை நம்பி கடந்த ஐனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஆன்லைன் வர்த்தகத்தில் சுமார் ரூபாய் 72,00,000/- முதலீடு செய்து, பின் தான் முதலீடு செய்த தொகையை எடுக்கமுடியாமல் ஏமாந்துவிட்டதாக கரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் தொடர்புடைய எதிரியின் இன்ஸ்டாகிராம் லிங்க் மற்றும் தொடர்புடைய தொலைபேசி எண் ஆகியவற்றை ஆராய்ந்ததில் இவ்வழக்கின் எதிரி முகமது ரோஷன், 27/25, கருவள்ளி பத்திக்கல் ஹவுஸ், மலப்புரம், கேரளா மாநிலம் என்பவர் என தெரியவந்தது, மேற்படி எதிரியை கைது செய்ய சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பரிமளாதேவி, சப்இன்ஸ்பெக்டர் சுதர்சன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் எதிரி முகமது ரோஷன் என்பவரை 20.04.2025 ஆம் தேதி பெங்களூருவில் வைத்து கைது செய்தனர். அவருடைய சுமார் 40 வங்கி கணக்குகளிலிருந்து சுமார் 1,00,00,000/- யை முடக்கம் (Freeze) செய்தும், அவரிடமிருந்து வழக்குகளின் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றபட்டது.
பின்னர் மேற்படி எதிரி முகமது ரோஷன் கரூர் மாவட்டம் அழைத்துவரப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் மேற்படி எதிரியை கரூர் மாவட்ட எஸ்.பி. பெரோஸ் கான் அப்துல்லா, பரிந்துரையின் பேரில் கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல், உத்தரவின்பேரில், இணைதள மோசடி குற்றத்திற்காக* குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.