பதிய பேருந்து நிலையம்
மீன் மார்க்கெட்
குடிநீர், பாதாள சாக்கடை, சாலைகள், காந்திகிராமம், கோதூரில் நீச்சல் குளம்
மார்ச்.31.
கரூர் மாநகராட்சியின் முதல் மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. மேயர் கவிதா கணேசன் தலைமை வகித்தார் .துணைமேயர் தாரணி சரவணன், ஆணையர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தியதுடன், பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியதற்கும் முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மாநகராட்சிக்கு சிறப்பு நிதி வழங்கிய உள்ளாட்சித்துறை அமைச்சர் கே. என். நேரு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநகராட்சியின் முதல் வரவு செலவு திட்ட அறிக்கையை மேயர் கவிதா கணேசன் கூட்டத்தில் தாக்கல் செய்தார் . கரூர் மாநகராட்சியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கு ரூ. 62.50 கோடி, காந்திகிராமம் பூங்கா மேம்பாடு பணிக்கு 4 கோடி, தாந்தோணி கலெக்டர் அலுவலகத்தில் பூங்கா அமைக்கும் பணி 4.70 கோடி, கரூர் மாநகராட்சி சனபிரட்டி பகுதிக்கு புதிய குடிநீர் திட்டம் 64.75 கொடியில் செயல்படுத்துவது.
மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் மேம்பாட்டுப் பணியை மேற்கொள்ள 42.12 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்வது , தாந்தோணி மற்றும் சனபிரட்டி பகுதிக்கு புதை வடிகால் திட்டம் மேற்கொள்ளும் பணி 231.54 கோடி செலவில் பணிகளை மேற்கொள்வது, கரூர் மற்றும் இனாம் கரூர் பகுதிக்கு புதை வடிகால் திட்டம் ரூ. 101.09 கோடியில் பணிகள் மேற்கொள்வது, வாங்கல் அரசு காலனியில் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை 24. 44 கோடி செலவில் மேம்படுத்துவது, மாநகராட்சியில் 25 கோடி மதிப்பீட்டில் தார் சாலைகளை மேம்படுத்தும் பணி மேற்கொள்வது,
தாந்தோணி சுங்ககேட் பகுதியில் நவீன மீன் மார்க்கெட் மற்றும் குளிர்சாதன சேமிப்பு கிடங்கு 13 கோடி செலவில் கட்டுவது, காந்திகிராமம் திருவள்ளுவர் பூங்காவில் ஆண் பெண் இருபாலருக்கும் நவீன கழிவறைகள் உடைமாற்றும் அறை உடன் கூடிய நீச்சல் குளம் ரூ 2.50 கோடி செலவில் அமைப்பது,கோதூர் சிறுவர் பூங்காவில் ஆண் பெண் இருபாலருக்கும் நவீன கழிவறைகள் உடை மாற்றும் அறைகள் கூடிய நீச்சல் குளம் ரூ.2.50கோடி மதிப்பீட்டில் கட்டுவது, புகழூர் சாலை முதல் வாங்கல் சாலை வரை காமதேனு நகர் வழியாக இணைப்புச் சாலையை 21 கோடி செலவில் மேம்படுத்துவது ரூ 10 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையம் அருகே தினசரி மார்க்கெட்டில் காய்கறி கடைகள் மற்றும் கடைகள் கட்டுவது ,
முத்துக்குமாரசாமி பேருந்து நிலைய பகுதியில் வணிகவளாகம் ரூ 10 கோடி மதிப்பீட்டில் கட்டுவது, என்பது உள்ளிட்ட ரூ.680.56 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்வது என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிதியாண்டில் மக்கள் பிரதிநிதிகள் விருப்பப்படி அனைத்து பகுதி மக்களுக்கும் பரவலாக எல்லா அத்தியாவசிய வசதிகளும் கிடைக்கப் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் சாலை, தெருவிளக்கு, வடிகால் மற்றும் சுகாதார வசதிகள், திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் வசதிகள் ஆகியவற்றை அனைத்து மக்களுக்கும் சமமாக முக்கியத்துவம் கொடுத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இதற்காக மாமன்றம் அனைத்து தரப்பு மக்களின் ஒத்துழைப்பையும் பொது சேவை நிறுவனங்களின் ஒத்துழைப்பையும் முழுமையாக சரியான நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளும். மேற்கண்ட வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளதால் அதிகளவில் செலவினங்கள் உருவாகும் . மாநகராட்சி தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தி வருவாய் இனங்களில் ஏற்படும் இழப்பினை தவிர்த்து வருவாயை அதிகரிக்க தக்க நடவடிக்கை எடுப்பது. இது அவசியமான மக்கள் நலப் பணிகளை மேற்கொள்ள வழிவகை ஏற்படுத்த ஏதுவாகும் என மேயர் தெரிவித்தார்.