மாரச்.3.
கரூர் மாநகராட்சியின் முதல் மேயர் பதவி பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது நேற்று மாநகராட்சி புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். இன்று மேயர் தேர்தலுக்கான வேட்பாளர்களை திமுக தலைமை அறிவித்துள்ளது . கரூர் மாநகராட்சி முதல் பெண் மேயராக கவிதா கணேசனும், துணை மேயராக தாரணி சரவணனும் அறிவிக்கப்பட்டுள்ளனர். நாளை நடைபெறும் மறைமுகத் தேர்தலில் இவர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். கவிதா கணேசன் ஏற்கனவே இனாம் கரூர் நகர் மன்ற தலைவராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.