மார்ச்.30.
புதிதாக உருவாக்கப்பட்ட கரூர் மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெற்றது .மேயராக கவிதா கணேசன், துணை மேயராக தாரணி சரவணன் தேர்வு செய்யப்பட்டனர். அடுத்தகட்டமாக மண்டல குழு தலைவர்களுக்கான வேட்பாளர்கள் திமுக தலைமையால் அறிவிக்கப்பட்டனர்.
கரூர் மாநகராட்சிக்கு நான்கு மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது. 4 மண்டலங்களுக்கு திமுக வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
மண்டலம் ஒன்றுக்கு 3வது வார்டு உறுப்பினர் சக்திவேல், மண்டலம் 2க்கு 24வது வார்டு உறுப்பினர் அன்பரசன், மண்டல மூன்றுக்கு 38வது வார்டு உறுப்பினர் ராஜா, மண்டலம் 4க்கு 37 வது வார்டு உறுப்பினர் கனகராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்
மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் இதனை அறிவித்தார். புதிய மண்டல தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்..